அம்பானி இல்ல திருமணம்;விழாக் கோலம் பூண்ட மும்பை;ஜோடியாய் படையெடுத்த கோலிவுட் பிரபலங்கள்,..

Author: Sudha
13 July 2024, 10:46 am

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண விழா 6 மாதங்களுக்கு முன்பே ஆண்டின் தொடக்கத்தில், குஜராத்தின் ஜாம் நகரில், இந்த ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள்,என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய சினிமா, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட துறைகளின் முக்கிய நபர்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர். பிரபல WWE வீரரான ஜான்சீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதேபோல் நடிகர்ரஜினிகாந்த், சூர்யா, ஏ ஆர் ரஹ்மான், இயக்குனர் அட்லி, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி கோலிவுட் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

  • Shankar's Game Changer vs Sundar C's Madagatharaja வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!