யாரும் இல்லாத பெண்கள் தான் டார்க்கெட்.. ரத்தம் வந்தாலும் விடமாட்டான்… சீரியல் நடிகையின் கண்ணீர் பேட்டி..!

Author: Vignesh
15 July 2023, 7:00 pm

திரைத்துறையை பொறுத்தவரை பல வருடங்கள் காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட நட்சத்திரங்களே பல வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணம், வாழ்க்கை , விவாகரத்து எல்லாம் சாதாரண பிரச்சனை போல் மாறிவிட்டது.

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைத்தன்யா போன்ற பிரபல ஜோடிகளின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்கள் எல்லோரும் இருவருமாக சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை பற்றி பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்க்கையிலும் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோ ஷூட்நடத்தி கொண்டாடியுள்ளார். அதில் கணவருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை கிழிப்பது, காலில் போட்டு மிதத்தல் , மது அருந்தியபடி தனக்கு டைவர்ஸ் கிடைத்ததை மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது. முள்ளும் மலரும் தொடர் மூலம் பாப்புலர் ஆன ஷாலினி சூப்பர் மாம் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலினி தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அதில் தனக்கு வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் மூன்று மாதத்தில் உறவு முறிந்து விட்டது என்றும், அதைப்பற்றி பேச வேண்டாம் என்றும், தான் தொடர்ந்து மீடியாவில் தான் இருந்து வருவதாகவும், 2016 ல் ஜோடி நம்பர் ஒன் ஷோவில் தான் பங்கேற்ற நேரத்தில் துபாக்கு சென்ற சமயத்தில், ரியாஸ் பழக்கமானதாகவும், அவர் முஸ்லிம் தான் ஆனால் திருவேற்காட்டில் இந்து முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஒன்றை ஆண்டுகளுக்கு பின் தான் கர்ப்பமானதாகவும், அதற்கு முன்பே தன்னை கொடுமைப்படுத்த தொடங்கி விட்டதாகவும், அதற்கான காரணம் எல்லாம் சைக்கோ தனமாக இருக்கும் என்றும், போனை தவறவிட்டு ஒருவர் அதை எடுத்து வந்து தரும்போது அவருக்கு நன்றி கூறினால் இரண்டு நாட்கள் தன்னை அடித்து துன்புருத்தியதாகவும்,

மது அருந்த சொல்லி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அப்போது தூங்கிவிட்ட நிலையில் தன்மேல் தண்ணீரை ஊற்றி நீ மட்டும் நல்லா தூங்குறியானு கேட்டு அதற்கும், அடிச்ச அடியில தன் தலையில் ரத்தம் வந்துவிட்டதாகவும், ரத்தம் வந்தாலும் விடாமல் இரத்தம் வர அளவுக்கு தன்னை அடிக்கவச்சிட்டுயேன்னு சொல்லி அதற்கும் பயங்கரமாக அடித்ததாகவும், அவரைப் பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு நல்லவன் மாதிரி இருப்பார் என்றும், தினமும் அடிவாங்கி கஷ்டப்பட்டதால்தான் விவாகரத்தை கூட போட்டோ சூட் ஆக நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

shalini-updatenews360

ரியாசுக்கு சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னையும் தன் குழந்தையும் கண்டுகொள்ளவில்லை என்றும், 2010ல் இருந்து வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாகவும், அப்போது இவருக்கு கல்யாணம் ஆகவில்லை அப்பா இல்லாத மற்றும் யாரும் இல்லாத பெண்களாக பார்த்து அவர்களை அடைந்திருக்கிறார் என்று தனக்கு தெரிய வந்ததாகவும், தனக்குத் தெரிந்து நாலு பேர் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னைப் பொறுத்தவரை தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும். இனிமேல் இந்த மாதிரியான நபர்களை மற்றவர்கள் ஏமாற்றுவதை தான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும், முதல் மனைவி இருக்கும் நபரை யாரும் கல்யாணம் பண்ணிக்காதீங்க விவாகரத்து பண்ணிட்டாங்களா என்பதை தெளிவாக தெரிந்த பின் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அந்த பேட்டியில் ஷாலினி தெரிவித்துள்ளார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?