மூளையில் 9 டைட்டானியம் கம்பிகள்.. வாழ்க்கையை திருப்பி போட்ட விபத்து.. பரிதாபக்குறிய நிலையில் முமைத் கான்..!

Author: Vignesh
12 January 2024, 9:21 pm

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் நடனமாடி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை முமைத் கான். இவர், மும்பை பெண்ணாக வளர்ந்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

விஜயின் வில்லு படத்தில் கேமியோ ரோலில் நடித்த முமைத் கான் கந்தசாமி படத்தில் என் பேரு மீனா குமாரி பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு இளசுகளை தன் வசப்படுத்தினார். அப்படி, சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் சொல்ல, 2016 அவரது அப்பார்ட்மெண்டில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.  தனது மூளையில் 9 டைட்டானியம் கம்பிகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் பெரும் போராட்டங்களை சந்தித்தாகவும் அவர் குறிப்பிட்டார். 

Mumait-Khan 2

அதனால் அவர் பதினைந்து நாட்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்தார். பின் சரியான சிகிச்சை உடற்பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு நலமாகினார். 2017க்கு பிறகு பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசன் இல் போட்டியாளராக கலந்து கொண்டு 49 நாட்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

Mumait-Khan 2

அதற்கு இடையில், லஹாரா மாபியா சம்பந்தப்பட்ட விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சர்ச்சையிலும் சிக்கினார். இந்நிலையில், உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய முமைத் கான் தற்போது, பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். கவர்ச்சியாடையில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனிடையே, ஆக்டிவாக இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது பகிர்ந்து வருகிறார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?