இதெல்லாம் அடுக்குமா? மும்பை வீட்டிற்கு இந்தியில் பெயர் வைத்த சூர்யா?

Author: Shree
12 April 2023, 11:12 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி மனைவி குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டார். மேலும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். 9,000 சதுர அடி கொண்ட அந்த பிரம்மாண்ட பிளாட்டில் கார்டன், கார் பார்க்கிங் உள்ளிட்டவை உள்ளது.

surya- updatenews360

இந்நிலையில் தற்போது அந்த வீட்டிற்கு சூர்யா இந்தியில் தன் பெயர் பலகை வைத்திருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். ஆனால், உண்மையில் அது சூர்யா வீடும் இல்லை, அவர் அப்படி பெயர் வைக்கவும் இல்லை. அது MIZU என்ற நட்சத்திர ஹோட்டல். வீடு போன்ற செட்டப்பில் இருக்கும் அந்த ஹோட்டலுக்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் வந்து போவது வழக்கம். அது சூர்யாவின் வீடு என வதந்திகள் பரவிவிட்டது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!