மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .
அடுத்ததாக நயன்தாராவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “LIC” ( லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை ரூ. 60 கோடி பட்ஜெட்டில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அக்காவாக நடிக்கப்போகும் நயன்தாராவின் ரோலுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை முடிந்த மறுநாளே அந்த டைட்டில் என்னுடையது என சொல்லி ஒரு இயக்குனர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னற்ற LIC நிறுவனம் விக்னேஷ் சிவன் மற்றும் 7 Screen ஸ்டூடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, LIC நிறுவனத்திற்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்கும் வகையில் இப்படத்தின் டைட்டில் இருக்கிறது. எனவே 7 நாட்களுக்குள் பட டைட்டிலை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விக்னேஷ் சிவன் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதை அடுத்து நயன்தாரா மீதும் மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது, அன்னபூரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் நயன்தாரா மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறாராம்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.