சைஃப் அலி கானை குத்தியவரின் புகைப்படம் வெளியீடு…தீவிர விசாரணையில் மும்பை போலீசார்..!
Author: Selvan16 January 2025, 7:02 pm
குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு
நேற்று இரவு பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலி கானின் பிரம்மாண்ட வீட்டில் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது,அதை தடுக்க வந்த சைஃப் அலி கானை கொள்ளையர் கத்தியால் சரமாரியாக தாக்கி தப்பித்து சென்றார்.இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சியாக்கியது
இதையும் படியுங்க: சைஃப் அலி கான் வீட்டில் நடந்தது என்ன… கேமராவில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அவருடைய மகன் ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அவருடைய உடம்பில் ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவருடைய முதுகு தண்டின் அருகே ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மும்பை சிட்டியின் முக்கியமான நகரில் அதுவும் பிரபல நடிகரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.முதற்கட்டமாக வீட்டில் உள்ள கேமெராக்களை ஆராய்ந்து பார்த்த போது குற்றவாளி வீட்டில் ஏற்கனவே பதுங்கி இருந்துள்ளார் என்ற தகவலை போலீஸார் கூறினார்கள்.
மேலும் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக கூறியிருந்த நிலையில்,தற்போது மும்பை போலீசார் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர் வீட்டினுள் படி வழியாக மேலே சென்ற போது இந்த காட்சி பதிவாகியுள்ளது.இதனால் குற்றவாளியை விரைவில் போலீஸ் பிடித்து விடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.