உதவி இயக்குனரை நம்ப வைத்து ஏமாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்..! பதிலடி கொடுத்து பகையை தீர்த்து கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகை..!

Author: Vignesh
8 December 2022, 3:30 pm

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் என்பவரும் ஒருவர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கஜினி. அந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்திருப்பார். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் ஏதோ சில சண்டைகள் ஏற்பட்டது. அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ், நாயன்தாரா இருவரும் சேர்ந்து தர்பார் படத்தில் இணைந்தார்கள்.

nayanthara - updatenews360.jpg 3

அந்த சமயத்தில் கூட நயன்தாராவுக்கு சம்பளம் பாக்கி இருந்ததால் கடைசி கட்டத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு எப்படியோ அவரை சமாதானப்படுத்தி இந்த காரியத்தில் நடிக்க வைத்தார்கள். இந்த தகவல் வெளிவந்து நயன்தாராவுக்கு பெரிய அவமானமாக ஆகிவிட்டது.

Nayanthara-2-Updatenews360

இதற்கெல்லாம் காரணம் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் என்று நயன்தாரா உறுதியாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முருகதாஸ் நடிகர் விஜய் வைத்து இயக்கிய கத்தி படத்தின் கதையை ஒரு உதவி இயக்குனரின் கதையாம், அதை திருடி தான் முருகதாஸ் படத்தை எடுத்துள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் வெளிவந்தது.

AR_Murugadoss - updatenews360

அந்த சமயத்தில் ஏ ஆர் முருகதாஸ் பெரிய இடத்தில் இருந்ததால், அந்த நேரத்தில் உதவி இயக்குனருக்கு கேட்க ஆள் இல்லாத காரணத்தினால் இதை பெரிதாக ஆக்கவில்லை. அந்த நிலையில் உதவி இயக்குனரின் கஷ்டத்தை கேட்டு நயன்தாரா உங்கள் படத்தை நான் தயாரிக்கின்றேன்.. உங்களுக்கு பிடித்த ஹீரோவை வைத்து படம் எடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த அந்த உதவியை இயக்குனர் நடிகை நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் கோபி நைனார் அறம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு பெரிய ஒரு வரவேற்பு கொடுத்தது.

Director Gopi Nainar - updatenews360

இயக்குனர் கோபி நைனார் தன்னுடைய எதிரியான முருகதாஸை பழிவாங்கும் வகையிலும் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளார் என்று நடிகை நயன்தாராவை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 746

    2

    0