பிரபல பாடகி ஜென்சி வாழ்க்கையை நாசமாக்கியதே அந்த இசையமைப்பாளர்தான் : பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 4:24 pm

சினிமாவில் பல பிரபலங்கள் வருவதும், உடனே கலை உலகத்தில் இருந்து விலகுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் பாடகர்கள் பொறுத்த வரை அவர்கள் குரல் மங்காத வரை சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கலாம்.

அப்படி ஒரு காலத்தில் ரெக்கை கட்டி பறந்தவர்தான் ஜென்சி. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இவர், சிறு வயது முதலே மேடை கச்சேரியில் பாடி வந்துள்ளார்.

ஒரு முறை யேசுதாஸ் உடன் பாட வாய்ப்பு கிடைத்தது, மேடையில் யேசுதாஸ்க்க இணையாக பாட, அவர் மீது கலையுலகத்தின் கண் பட்டது.

அப்போது தான் ஜென்சியை இளையராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் யேசுதாஸ். தொடர்ந்து தமிழில் அடி பெண்ணே. என்னுயிர் நீதானே, என் வானிலே, காதல் ஓவியம் போன்ற காலம் காலமாக ரசிக்கப்படும் பாடல்களை பாடினார்.

தொடர்ந்து இளையராஜா வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்க கொடிக்கட்டி பறந்தார் ஜென்சி, ஆனால் திடீரென இனி பாடல்கள் பாடப்போவதில்லை என முடிவெடுத்து, கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றினார்.

கேரளாவை விட்டு சென்னைக்கு ஜென்சி வந்தால் புகழ் பெறலாம் என இளையராஜா எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் ஜென்சியின் தந்தையோ மறுப்பு தெரிவித்தள்ளார்.

தமிழ் சினிமாவில், ஜானகி, சுசீலா போன்ற பல முன்னணி பாடகிகள் இருக்கும்போது நமக்கு இவ்வளவுதான் என எண்ணி ஜென்சி பாடுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் பாடிய பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களை கூட ஜென்சி பார்த்ததே இல்லை, இதனால்தான் அவர் பாடுவதை விட்டு ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது

ஆனால் இது குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் பேசும் போது, ஜென்சியின் பயணம் தடைபட்டதற்கு இதெல்லாம் காரணமே கிடையாது. அவர் இனிமேல் பாடமாட்டேன் என முடிவை அவராகவே எடுக்க வில்லை. இதற்கான காரணம் இங்குள்ள இசையமைப்பாளர்களை கேட்டால் தெரிந்துவிடும். அதுமட்டுமல்ல, ஜென்சி கேரளா மாநிலம் கொச்சியில் தான் உள்ளார். அவரிம் கூட கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும் போது ஜென்சி தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டதற்கு பின்னால் ஒரு பெரிய மர்மமே உள்ளது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி