தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆன யுவன் சங்கர் ராஜா இசை கலைஞர் ஆகவும் பின்னணி பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி வருகிறார்.
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா 15 வருடங்களாக இந்த இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி பெரும் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்தவர். 1996 ஆம் ஆண்டில் தன்னுடைய 16 வயதில் அரமிந்தன் என்கிற திரைப்படத்திற்காக இசையமைத்து தன்னுடைய இசை வாழ்க்கையை துவங்கினார்.
பின்னர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மேலும் 2000 கால கட்டத்தில் ஆரம்பத்திலும் நடுப்பகுதியிலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
தன்னுடைய மிகச் சிறந்த இசைக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்று கௌரவிக்கப்படும் இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலையே இருக்காது எனக் கூறியிருக்கிறார்.
அதாவது கோவையில் வருகின்ற 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது முதலில் பேசிய யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களும், புதிய முயற்சிகளுடனும் நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன். கோவை சேர்ந்த ரசிகர்கள் மிகவும் வைப் உணர்வு கொண்டவர்கள், அவர்களின் உணர்வுகள் மூலமாக தான் நல்ல நல்ல பாடல்கள் என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது.
பழைய பாடல்கள் ரீமேக் செய்வது அவர்களின் மற்றொரு வெர்சனாக பார்க்கிறேன். இதனால் பாடலின் ஒரிஜினாலிட்டி கெடாது. AI – தொழில் நுட்பம்- அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. AI தொழில்நுட்பத்தில் உண்மைக் தன்மை இருக்காது என்று ஏ ஆர் ரகுமான் கூறியது உண்மைதான்.
இதையும் படியுங்கள்: இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் காலமானார் – இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!
விஜய் சார் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன். பழைய பாடல்களை பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்சனை நிச்சயம் வரும் ஆனால் முன்னதாகவே அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவது சரியான முறையாக இருக்கும். கோட் திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்வது ரசிகர்களின் கருத்துகளுக்கு பின்பே அதை நாங்கள் மேற்கொண்டோம்.
பின்னர் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேட்டியில் கோவையில் முதல் முறையாக 360 டிகிரி நிகழ்ச்சி நடத்துகிறோம். நிகழ்ச்சி கொடிசியாவில் நடைபெறுகிறது. சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
கோவையில் நடக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும். டிக்கெட் 500 முதல் 25,000 வரைக்கும் விற்பனை செய்கிறோம். 20 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தள்ளு முள்ளு நடக்காமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுவன் நிகழ்வில் போதை பொருள் தேவையோ இருக்காது யுவனின் பாடல்களே ஒரு போதை தான் என்றனர்.