தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனை டீலில் விட்ட அனிருத்.. ஆனா இதுல விசயமே வேற..!
Author: Vignesh18 April 2023, 2:00 pm
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்தாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் தற்போது விஜய்யின் லியோ, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினி காந்தின் ஜெயிலர் ஆகிய படங்களில் பிஸியாக இருந்து வருவதனால் சிவகார்த்திகேயன் படத்திற்கு அனிருத் வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இதுவரை 7 திரைப்படங்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.