முன்னாள் மனைவி மீது இப்படி ஒரு புகார்: இசையமைப்பாளர் டி.இமான் செயலால் ஷாக்கான ஆன ரசிகர்கள்..!

Author: Rajesh
5 April 2022, 11:22 am

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்கதா இடம்பிடித்துள்ளார். இதனிடைய டிஇமான் 2008ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ஆனால் சமீபத்தில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்த செய்தியை டி.இமானே தனது சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மனைவி மீது டி.இமான் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மனைவி குழந்தைகளுக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பதிவு செய்துள்ளார் என புகார் அளித்துள்ளார். தற்போது இமானின் முன்னாள் மனைவி மோனிகாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!