மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது திடீரென கடுப்பான இளையராஜா… புது டியூனை போட்டு ரூட்டை மாற்றிய நிகழ்வு..!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 4:18 pm

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது இசையமைப்பாளர் இளையராஜா திடீரென கடுப்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

34வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலாக அரங்கத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியை இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் ரமா மேத்யூ (மறைமுக வரிகள் மற்றும் மத்திய வாரியம்), மண்டலிகா ஸ்ரீனிவாஸ் central excise தமிழ்நாடு மண்டலத்தின் முதன்மை ஆணையர் கலந்து கொண்டனர்.

34வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சியை (ஜனனி ஜனனி ஜகம் நீ) என்னும் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பாடி நிகழ்ச்சியை இளையராஜா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு சிற்பிக்கு எவ்வாறு தேவையில்லாத பாகங்களை நீக்கினால் மட்டுமே அதன் சிலை உருவாகுமோ.., அதுபோல தேவையில்லாத தட்டுகளை நீக்கினால், மட்டுமே முறையான தாளம் உருவாகும், என்றார், அதுபோல தன்னைப் பற்றி வரும் அவதூறு பேச்சுகளை நான் ஒருபோதும்கண்டு கொள்வதில்லை எனக் கூறினார்.

மேலும், உங்கள் அனைவரும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறிய அவர், தனது ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் ரெக்கார்டிங்கை போன் கால் மூலமாக கேட்க வைத்தார். இப்போது உங்கள் அனைவரும் எனது ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது, என அவர் கூறினார்.

முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜனனி ஜனனி பாடலை பாடும் போது, மேடைக்கு அருகே இருந்த ஒருவர், பாடுவதை குறுக்கிடுவது போல கத்தினார். இதனால், கடுப்பான இளையராஜா, அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் தொடர்ந்து பாடலை பாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=UXZE-WbGmNI
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!