மனைவி நல்ல காதலி இல்லை; பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்..

Author: Sudha
19 July 2024, 1:54 pm

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் டி இமான். 100 திரைப்படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தில் இமானின் இசை அனைவரையும் கவர்ந்தது.இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் குடும்ப பிரச்சினை என சமீபத்தில் திரைத்துறையில் பேசப்பட்டது. இமானும் இனி சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைக்க போவதில்லை என அறிவித்தார்

இந்நிலையில் இமானின் ஒரு பேட்டி தற்போது பிரபலம் ஆகி வருகிறது. பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இமான், நமக்கு பிடித்த காதலி நமக்கு மனைவியாக ஆவார் என்பது சந்தேகம் தான். அதே மாதிரி மனைவி நல்ல மனைவி நமக்குப் பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை. நமது குழந்தைகள் நம்முடைய செல்வங்கள் என்று வளர்க்கிறோம், இருப்பினும் ஒரு கட்டத்தில் அதுவும் மாறிவிடுகிறது.

நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. அதைப்போலவே நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதில்லை. இசைத்துறையில் சாதாரண ஒரு கலைஞராக இருந்தாலே போதும் என்று நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக இருக்கும் வாய்ப்பை அந்த கடவுள் கொடுத்துள்ளார் அதற்கு இறைவனுக்கு நன்றி என்று டி இமான் தெரிவித்துள்ளார். 

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி