சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

Author: Vignesh
13 April 2024, 10:31 am

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஷோபனா. இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

shobana muthazhagu

மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!

அதில், அவர் கூறுகையில் என் தாத்தா வீட்டில் தான் தங்கி படித்தேன். அப்பா, அம்மா துணை இல்லாமல் தாத்தா என்னை வளர்த்தார். கல்லூரியில், படிக்கும் போது யாரும் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். அப்போது, நான் எனது நண்பர்கள் சாப்பிடும் தட்டில் இருந்து எடுப்பேன். அவர்கள் ஷோபனா வரா ஒளிச்சு வைங்க என்று கூறுவார்கள். எனக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது.

shobana muthazhagu

மேலும் படிக்க: நா காலேஜ் ஸ்டூடண்ட்.. பரவால்ல ரேட் என்னன்னு சொல்லு.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

நான் ஒரு நாளைக்கு ஒருவேளை தான் சாப்பிடுவேன். பின்னர், நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு இயக்குனர் என்னிடம் நீ எல்லாம் ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட நீ அந்த மெட்டீரியல் கிடையாது என்று சொன்னது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், விழவே கூடாது போராட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு, தான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று தனது வேதனைகளை தெரிவித்துள்ளார்.

muthalagu

மேலும், அந்த பேட்டியில், சரக்கு அடித்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு எப்படி இருக்கும் என்று ட்ரை பண்ண குடித்து இருக்கிறேன் என்றும், எனக்கு அது பிடிக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார். ஆபாச படம் பார்த்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, 50 shades of gray படத்தை பார்த்து இருகிறேன். காதலித்து ஏமாந்து இருக்கிறேன். லவ்வில் எல்லாம் இருக்கும் என்றும், ஷூட்டிங்கில் பொய் சொல்லிவிட்டு போகாமல் இருந்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அப்படி எல்லாம் இல்லை. ஒரு முறை ஷூட்டிங்கில் வயிறு வலியால் மயங்கி விழுந்து இருக்கிறேன். ஹாஸ்பிடலுக்கு சென்று ஊசி போட்டு வந்து நடிக்க வச்சாங்க, தொழில் பக்தியும் இருக்கு.. ஆனால், சார் விட்டுருங்கன்னு சொன்னால் விட்டுருவாங்க என்று ஷோபனா கூறியுள்ளார்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!