‘விதி அதோட வேலையை சரியாத பண்ணிருக்கு’… ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’- தோல்வி குறித்து உண்மையை உடைத்த காமெடி நடிகர்..!
Author: Vignesh10 January 2023, 5:00 pm
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், ‘லொள்ளு சபா’ மாறன், மனோபாலா, ‘லொள்ளு சபா’ சேசு, டி.எம்.கார்த்திக், ‘கேபிஒய்’ ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு கம்பேக் ஆக பல வருடமாக போராடி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நினைத்தார்கள். ஆனால், இந்த படம் ரசிகர்களை தியேட்டரிலிருந்து தெறித்து ஓட வைத்துள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை.

அந்த படத்தின் தோல்விக்கு youtubeல் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் காரணம் என வடிவேலுவே முன்பு ஒரு பேட்டியில் கூறினார்.
இந்நிலையில் வடிவேல் உடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து இருக்கும் முத்துக்காளை அளித்து இருக்கும் பேட்டியில் வடிவேலுவின் தோல்வி பற்றி பேசி இருக்கிறார்.
“நாங்கள் நடிக்கும்போது வடிவேலு நன்றாக வரணும், காமெடி காட்சி பேசப்படனும் என்று தான் நடிப்போம். ஆனால் இப்போ இருப்பவர்கள் அவங்க நல்லா தெரியணும் என்று மட்டும் நடிக்கிறார்கள். தோல்விக்கு இதுவும் காரணாமாக இருக்கலாம்” என முத்துக்காளை தெரிவித்து இருக்கிறார்.
“விதி வடிவேலுவை கரெக்டா செஞ்சிருக்கு” – நாய் சேகரை பொளந்த முத்துக்காளை! https://t.co/wupaoCzH82 | #vadivelu #muthukalai #naaisekarreturns #Cinema pic.twitter.com/Vsf4qLLKEW
— ABP Nadu (@abpnadu) January 9, 2023