என்னம்மா சொல்றீங்க..! பாலா இப்படிப்பட்டவரா.. நினைச்சுக் கூட பார்க்கலை.. விவாகரத்துக்கு முன் மனைவி வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
17 February 2023, 10:35 am

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.

அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

bala - updatenews360

சேது படத்தின் மூலம் அறிமுகமானவர், பின்னர் பல படங்களை இயக்கினார், பாலா ஒரு வித்தியாசமான இயக்குநர். அதிலும் நடிப்பு வரவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் திட்டுவது, கடும் சொற்களால் பேசுவது என ஒரு டெரரான ஆள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் 18 வருட திருமண வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துள்ளது என்று விவாகரத்து செய்தியை பாலா வெளியிட்டார். மனைவி முத்துமலருடன் கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த ஆண்டு சட்ட ரீதியாக இருவரும் பிரிந்தனர்.

bala - updatenews360

மகள் இருக்கும் நிலையில் பாலா னைவி முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு பின் பாலாவும் முத்துமலரும் தங்கள் வேலைகளை பார்த்து வரும் நிலையில் முத்துமலர், பாலா இயக்கிய பரதேசி படத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலா குறித்து அப்போது புகழ்ந்து பேசியிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

bala - updatenews360

மேலும் பாலா தன்னிடம், தன் குழந்தையிடம் தான் அன்பாக இருப்பார் என்றும், வீட்டிற்கு வந்தால் அவருக்கு தாங்கள் தான் என்று கூறியதாகவும், பாலாவுக்கு ஒருவரை பிடிக்காமல் போனால், சண்டைபோட்டு சென்று விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

bala - updatenews360

மேலும் இதுகுறித்து கூறுகையில், திருமணத்திற்கு பின் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தன்னிடம் சொல்லமாட்டார் என்றும், அதன்பின் தான் போகபோக அவரை புரிந்து கொண்டதாகவும், அவருக்கு அவரை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என முத்துமலர் தெரிவித்திருக்கிறார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…