வீரம் படத்துல நடிச்சு என்னோட கெரியரே போச்சு.. புலம்பும் நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 2:20 pm
வீரம் படத்துல நடிச்சு என்னோட கெரியர் பாதிப்படைந்ததாக பிரபல நடிகை வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க : நான் அவருக்கு ஜோடியா…பிரபல இயக்குனர் படத்தை தூக்கி வீசிய நடிகை த்ரிஷா..!
இன்னொருவன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மனோ சித்ரா. பிறகு அவள் பெயர் தமிழரசி படத்தில் நந்தகி என தனது பெயரை மாற்றினார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு தமிழ் நடிகை என்ற பெயர் இவருக்கு கிடைத்தது.
வீரம் படத்தால் கெரியரே போச்சு என புலம்பும் நடிகை மனோ சித்ரா
ஆனால் அடுத்த படமான நீர்பறவை படத்தில் தனது ஒரிஜினல் பெயரான மனோ சித்ராவுடனே சினிமாவில் தொடர்ந்தார். இதையடுத்து அஜித்துடன் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். படமும் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. ஆனால் இந்த படத்தில் நடித்ததால் தனது கெரியரே பாதிப்படைந்ததாக நடிகை மனோ சித்ரா புலம்பியுள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக என்னை நடிக்க வைப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர். தமன்னா இறந்துவிடுவார், பின்னர் அஜித்துக்கு ஜோடி நீங்கள்தான் என கூறினர்.
நானும் நடிக்க சம்மதித்தேன். ஆனால் போக போக நான் ஜோடி என கூறியது பொய் என தெரிந்து கொண்டேன். இதனால் என் கெரியரே பாதிப்படைந்தது என கூறியுள்ளார்.