நான் கர்ப்பமாக இருப்பதை பூனை தான் முதலில் கண்டுபிடித்தது… ஷாக் கொடுத்த பிரபல நடிகரின் மனைவி!
Author: Shree28 June 2023, 11:48 am
நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டாரிஸ்ட் ஆன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார்.

இவர் தன்னுடன் படித்த தோழி ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். நகுல் தனது மனைவியின் பிரசவத்தை வாட்டர் பர்த் முறையில் தான் பெற்றார். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட அது மிகப்பெரிய அளவில் வைரலானது. அது போல் நகுலின் மனைவி ஸ்ருதி தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவருமே வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள். இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் கர்ப்பமாக இருந்தபோது முதலில் என் கர்ப்பத்தை அறிந்தது என் பூனை தான். அவன் என் வயிற்றை தடவி தடவி கொடுத்தான். இப்படியெல்லாம் அவன் செய்யவே மாட்டானே என நான் யோசித்தேன் . பின்னர் இரண்டு வாரங்களுக்கு பிறகு நான் பரிசோதித்து பார்த்தபோது எனக்கே தெரிந்தது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று. இதெல்லாம் விலங்குகளுக்கு முன்னரே தெரியுமாம் என அவர் கூற அதற்கு நெட்டிசன்ஸ் பலரும் ஆமாம், நான் கர்ப்பமாக இருக்கும்போது கூட முதலில் என்னுடைய நாய் தான் அதை கண்டுபிடித்தது என கூறி வருகிறார்கள்.