MY DEAR ரஜினி… இன்னும் இளமையாவே இருக்கீங்க : Heart emoji பறக்க விட்டு வாழ்த்து கூறிய 80களின் நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2022, 1:32 pm
கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது.
திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.
இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்துக்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் ரஜினிக்கு ஃபேஸ்புக் மூலமாக வாழ்த்துகளை கூறியிருக்கிறார் நடிகை ராதா.
நடிகை ராதா 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை. ரஜினியுடன் ஏராளமான படங்களில் நடித்த அவர், இறுதியாக ராஜாதி ராஜா படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ரஜனியின் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து கூறிய ராதா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் MY DEAR, ஒவ்வொரு பிறந்தநாளன்று நீங்கள் இன்னும் இளமையாகிக்கொண்டே போகிறீர்கள், நீண்ட ஆயுளுக்காகவும், சந்தோஷமாக இருக்கவும் இறைவனை வேண்டுகிறேன். என பதிவிட்ட கூடவே, Heart Emojiஐ பதிவு செய்துள்ளார். மேலும் அவருடன் நடித்த படத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.