என்ன வளரவிடாமல் தடுத்ததே அந்த பிரபல நடிகர் தான் – மனம் குமுறிய சாந்தனு!
Author: Shree21 April 2023, 5:10 pm
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமான பலர் திறமையல்லாததால் பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தும் அடையாளம் தெரியாமல் போயியுள்ளனர். அந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஒரே மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் கதை முதலில் நன்றாக இருந்ததாம். ஆனால் மகனின் முதல் படம் மாபெரும் ஹிட் அடிக்கவேண்டும் என எண்ணிய பாக்யராஜின் அந்த கதையில் குறுக்கிட்டு சில மாற்றங்களை செய்யவே அது பிளாப் ஆகிவிட்டதாம். இதனால் நீ கதையே கேட்கவேண்டும் நானே கேட்டு ஓகே பண்றேன் என பாக்கியாஜ் சாந்தனுவை கிட்ட நெருங்கவே விடவில்லையாம்.
அந்த நேரத்தில் தான் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. உடனே அந்த கதையை படித்துவிட்டு பாக்யராஜ் இது நல்லா இல்லை என கூறி நிராகரித்துவிட்டாராம். பின்னர் அந்த ரோலில் நடிகர் ஜெய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதன் பிறகு அந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துவிட்டது.
அதன் பிறகு நானும் சோர்ந்துவிட்டேன். என் அப்பா என்னைவிட மிகவும் வருத்தப்பட்டார். இனி நீயே கதை கேட்டு முடிவு செய்து நடி அது தான் உனக்கும் நல்லது என விலகிக்கொண்டாராம். ஆனால், முதல் படமே தோல்வியடைந்ததால் எனக்கு பெரிதாக வாய்ப்புகள் தேடி வரவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் சாந்தனு.