தமிழ் சினிமாவில் தனுஷ் சிவகார்த்திகேயன், விஷால், உதயநிதி ஸ்டாலின், அஜித், விக்ரம் , விஷ்ணு விஷால், விமல் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் சரண்யா பொன்வன்னன் .
இவர் அம்மா கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமாவில் நடித்து பிரபலம் ஆனார். அம்மா ரோல் என்றாலே இயக்குனர்களுக்கு டக்கென ஞாபகத்துக்கு வருந்துவிடுவார் நடிகை சரண்யா பொன்வண்ணன் .
தொடர்ந்து சரண்யா பொன்வண்ணன் கிடைக்கும் வாய்ப்புகளில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரண்யா பொன் வண்ணன் தனது கணவர் குறித்தும் தன்னுடைய வெற்றிக்கு காரணம் அவர்தான் எனக் கூறியும் பேசி இருக்கிறார்.
அதாவது, நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி தான் என்னுடைய கணவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு வேலை செய்வது இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ஆறு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன்.
கணவருக்கு நல்லா சமைச்சு போடணும் என்றும் ஒரு நல்ல மனைவியாக இருக்க ஆசைப்பட்டு தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அவர்தான் என்னை சினிமாவில் நடிக்க அனுமதித்தார்.நீ நடிக்கலாம் உன்னுடைய திறமை இருக்கு என சொல்லி என்னை மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வைத்தார்.
ஒரு வேலை அவர் மட்டும் அன்று அதற்கு சம்மதித்து எனக்கு ஊக்கம் அளிக்கவில்லை என்றால் இன்று நான் இரண்டாவது இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டிருக்க மாட்டேன். இதுவே வேறொரு ஆண்மகனாக இருந்தால் பொறாமை பட்டு இருப்பார்கள்.
இதையும் படியுங்கள்: ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்ற பிரபலங்கள் – யார் யார்ன்னு பாருங்கள்!
இவங்களுக்கு இவ்ளோ வெற்றிகள் இவ்வளவு பெயர் புகழ் இருக்கிறது… இவ்வளவு இருக்கக்கூடாது என மனைவிய அடக்க பார்த்து இருப்பார்கள். ஆனால், என்னுடைய கணவர் அப்படி இல்லை. நான் சக்சஸ் ஆக வேண்டும் என்று அவர் தொடர்ந்து என்னை ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார். இப்படி ஒரு புருஷன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சரண்யா பொன்வண்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு பேசினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.