பார்த்திபனால் என் வாழ்க்கை நாசமா போச்சு… நான் செய்த மிகப்பெரிய தவறு- மனம் வருந்திய சீதா!

Author: Shree
10 May 2023, 10:02 am

90ஸ் களில் பிரபல நடிகையாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இப்படி பிரபல நடிகையாக சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதோடு ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இதனிடையே பார்த்திபன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை Flirt செய்து வந்ததை பல பத்திரிகைகள் கிசுகிசுக்களாக செய்தி வெளியிட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் பிரியலாம் என முடிவெடுத்து 2001ம் ஆண்டு 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த சீதா சீரியல் நடிகர் சதீஷை மறுமணம் செய்தார்.அந்த திருமணமும் சீதாவிற்கு சரியாக அமையவில்லை, விவாகரத்து பெற்றார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்ட அவர், நான் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என பார்த்திபன் என்னை வலுக்கட்டாயப்படுத்தியதால் நடிப்பை பத்தியில் நிறுத்திவிட்டேன்.

அப்போது நான் சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயம் அது. அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்குமால் அடையாளத்தை இழந்தேன். எனவே யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும், அந்த அடையாளம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விலகிப் போனால் பிறகு அந்த இடத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம். ஆக, திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பை நிறுத்தியது எனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என வருந்தி பேசியுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?