இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நடிகையான ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் பிரபல இளம் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தடக் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி டோலிவுட்டில் என் டி ஆர் உடன் தேவாரா என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் கூட இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின் என்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத இந்த விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் அதற்காக ஆஸ்கார் விருதே கொடுத்தாலும் நான் அதை செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார்.

அதாவது என்னுடைய அம்மாவுக்கு என்னுடைய தலைமுடி என் மீது அலாதி பிரியம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் ஊற வைத்து மசாஜ் செய்துவிடுவார். ஒருமுறை நான் என்னுடைய முதல் படத்திற்காக சிறிய அளவு முடியை வெட்டி விட்டு வீட்டிற்கு சென்றேன். அவர் உடனே கடும் கோபத்துடன் என்னை திட்டினார்.
அதனால் என்னுடைய நீளமான தலைமுடியில் நான் ஒருபோதும் கை வைக்க மாட்டேன். மொட்டை அடித்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்றால் அந்த படத்திற்கு ஆஸ்கார் அவார்ட் கொடுத்தாலும் கூட என் அம்மாவுக்கு பிடிக்காத அந்த விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்த பேட்டில் கூறியிருக்கிறார்.