உயிருக்கு போராடும் அம்மா…?புற்றுநோய் தாக்கத்தால் உருக்குலைந்த குடும்பம் – பிரியா பவானி வேதனை!

Author: Shree
22 September 2023, 7:52 pm

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

priya bhavani shankar - updatenewse360

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்றது. எஸ். ஜெ சூர்யாவுடன் பொம்மை ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

priya bhavani shankar - updatenewse360

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் புற்றுநோய் மையம் சார்பில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ‘கடந்த வருடம் எனது அம்மாவுக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் என்னையும் பரிசோதனை செய்துக்கொள்ள சொன்னார்கள். என் அம்மாவை இழக்க விரும்பாத நான், விரைவில் குணமடைந்துவிடும் என நான் அம்மாவுக்கு தினமும் நம்பிக்கை ஊட்டுவேன். அது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதால் எளிதில் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவர்களை நம்புங்கள்’ என அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புற்றுநோயாளிளுக்கு நம்பிக்கை ஊட்டி பேசினார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 739

    1

    0