அம்மா முன்னாடியே இன்னொருத்தி கூட…. வெட்கமா இல்ல? பலபேர் முன் திட்டிய மகன் – வீடியோ!
Author: Shree28 March 2023, 2:33 pm
பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.
கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு குடும்பத்தோடு வந்து பேட்டி கொடுத்த மைனா கணவர் யோகேஷிடம் ரசிகை என கூறி பெண் ஒருவர் அவருக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி, கட்டிபிடிக்க சொல்லியும் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள கூறியும் பிராங் செய்தார். அப்போது மைனா செம கூலாக தாராளமா வா என் பையன பார்த்துக்க ஒரு ஆயா தேவை என கூலாக பேசினார். ஆனால், அவரது மகன் யோகேஷனை கேவலமான ரியாக்ஷ் கொடுத்து திட்டியது தான் ஹைலைட். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.