இரண்டு எருமை மாடுகள்…. மைனா நந்தினி பதிவிற்கு அதிரும் கமெண்ட்கள்!

Author:
4 November 2024, 7:21 pm

பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.

கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

myna nandhini-updatenews360

இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதுவும் அவருக்கு நல்ல விளம்பரமாகவே அமைந்தது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறந்தாங்கி நிஷாவை கட்டிப் பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு “Two buffalo in one frame” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

myna nandhini

இதனை பார்த்து நெட்டிசன்ஸ் விழுந்து விழுந்து சிரித்து கமெண்ட் செய்து ட்ரோல் செய்த வருகிறார்கள். மேலும் சிலர் உண்மையை சொல்றவங்களுக்கு தெய்வத்திற்கு சமம் என மைனா நந்தியின் பதிவிற்கு லைக் குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக நிஷா தான் உண்மையான எருமை மாடு மாதிரி இருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்து ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 120

    0

    0