சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்த மைனா…என்னமா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா..புலம்பும் ரசிகர்கள்..!

Author: Selvan
6 December 2024, 6:42 pm

இலங்கை ஷூட்டிங்கின் துயர அனுபவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மைனா நந்தினி.அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார்.

Myna Nandhini YouTube Channel

இவர் முதன்முதலில் அருள்நிதி நடித்த வம்சம் திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்திருப்பார்.பின்பு பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் தற்போது தனது கணவர் யோகேஸ்வரனுடன் இணைந்து மைனா லிங்க்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.அதனை தொடர்ந்து லவ் ஆக்ஷன் டிராமா என்ற இன்னொரு சேனலையும் நடத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: புஷ்பா 2 பார்த்துவிட்டு அட்லீ சொன்ன வார்த்தை…X-தளத்தில் பதிவு..!

அதில் சில குறும்படங்களை வெளியிட்டு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறார்.புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரில் நடித்து அதனை தன்னுடைய சேனலில் வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் அந்த வெப் தொடரை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.

Myna Nandhini Pulathatchi Web Series

அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அதாவது அந்த வெப் தொடருக்காக தன்னுடைய டீம் மெம்பர்களை அழைத்துக்கொண்டு இலங்கை சென்றுள்ளார்.அங்கு கிட்டத்தட்ட 11 நாட்கள் ஷூட் முடித்து ஹார்ட் டிஸ்கில் எல்லாத்தையும் பதிவு செய்து திரும்ப வரும் போது,அந்த ஹார்ட் டிஸ்க் கீழே பலமாக விழுந்துள்ளது.

இதில் அதில் பதிவான 800 ஜிபி பட காட்சிகள் வேலை செய்யவில்லை.இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி மற்றும் அவரது கணவர் எங்களுடைய மொத்த சேமிப்பு பணத்தையும்,இந்த புள்ளத்தாச்சி வெப் தொடரில் போட்டு ஷூட் பண்ணிட்டு இருந்தோம்.இப்போ எல்லாமே வீணாகிவிட்டது என்று புலம்பிவருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 168

    0

    0

    Leave a Reply