விஜய் டிவியுடன் மோதல்?.. இனி நான் வரமாட்டேன்; வெளிப்படையாக பேசிய மைனா நந்தினி..!

Author: Vignesh
7 August 2024, 5:21 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மைனா நந்தினி. இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அதன் மூலம் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது, திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப் சீரிசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடைய எதார்த்தமான நடிப்பு இவருக்கு அடுத்தடுத்து, வாய்ப்புகளை வாங்கி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் நீங்கள் ஏன் முன்பு மாதிரி டிவியில் வருவதில்லை. உங்களை யாரும் நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவது இல்லையா? அல்லது அங்கு ஏதேனும் பிரச்சனையா என்று கேள்வி கேட்கப்பட்டது.

myna nandhini-updatenews360

அதற்கு பதில், அளித்த அவர் அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க… ஆரம்பத்தில், டிவி சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இப்போது, அது மூலமா எனக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய கனவை நோக்கி தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதனால், தான் நான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன். எனக்கு யாரோடும் கருத்து வேறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 187

    0

    0