எனக்கு அந்த மாதிரி பழக்கம் இருந்தது..- மேடையில் உண்மையை போட்டுடைத்த இயக்குனர் மிஸ்கின்..!

Author: Vignesh
26 April 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் பல வெற்றிப்படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர். அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் படங்களை எடுத்துப்பதில் திறமைமிக்கவர் இயக்குனர் மிஸ்கின்.

mysskin - updatenews360

இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநரான கதிரிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்பை பெற்ற மிஷ்கின் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படம் வருகிற மே மாதம் 30 தேதி வெளியாகவுள்ளது.

இவர், எதார்த்தமான பேய் படங்களையும் திரில்லர் படங்களையும் எடுத்து பிரபலமானவர். இவர் மிஸ்கின் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். எப்போதும் மிஸ்கின் விழாக்களின் மேடையில் பேசும் போது சில சர்ச்சை கருத்துக்களோடு பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் நடந்த டைனோசர்ஸ் Dinosaurs (DieNoSirs) என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் பேசினார் மிஸ்கின்.

Mysskin - Updatenews360

அந்த விழாவில் தனக்கு முன் பேசுனவங்க மயிறு மாதிரி பேசுனாங்க என்று பேசிய மிஸ்கின், இயக்குவது பற்றியும் சர்ச்சையாக தெரிவித்து இருக்கிறார். மேலும், பேசிய மிஸ்கின், அஞ்சாதே படத்தின் ஷூட்டிங்கின் போது நான் 120-சிக்ரெட் ஒரு நாளைக்கு அடிப்பேன் என்று மிஸ்கின் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 466

    0

    0