ஒழுங்கா இருந்துக்கோ அவ்ளோவ் தான் மரியாதை…. லியோ climax’யை உளறிய மிஷ்கின் – மிரட்டிய லோகேஷ்?

Author: Shree
6 July 2023, 10:31 am

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதற்காக காஷ்மீருக்கு படக்குழு அண்மையில் சென்றிருந்தது. அதையடுத்து சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் லியோ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து பேசி படத்தின் ரகசியத்தை உடைத்துவிட்டார். ஆம், அந்த பேட்டியில், நான் இப்படத்தில் வில்லனாக தான் நடிக்கிறேன். கிளைமாக்சில் நானும் விஜய்யும் சண்டையிடுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அதில் என்னை அடிக்க தயங்கி நான் அண்ணனை அடிக்க மாட்டேன் வேற எப்படியாவது எடுக்க முடியுமா என லோகேஷிடம் கேட்க அவரும் சரி என கூறி வேறு மாதிரி யோசித்தாராம். அதற்கு மிஷ்கின் அதெல்லாம் வேண்டாம் நீ அடிப்பா என விஜய்யிடம் சொல்ல பின்னர் ஒரு வழியா சம்மதித்து அந்த காட்சியில் நடித்தாராம் விஜய்.

படத்தை குறித்து எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என திரிஷா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரிடமும் சத்தியம் வாங்கியுள்ள லோகேஷ் மிஷ்கினை நடிக்க வச்சி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார் என நெட்டிசன்ஸ் தலையில் அடித்துக்கொண்டனர். படம் வெளிவருவதற்குள் இன்னும் என்னென்னெ சொல்லிடுவாரோ மிஷ்கின்? அவருக்கு ஒரு வாய்ப்பூட்டு போட்டு வையுங்கள் இல்லை என்றால் மொத்த கதையையும் உளறிடுவார் என லோகேஷுக்கு பலர் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து மிஷ்கினை லோகேஷ் மிரட்டி வைத்திருக்கிறாராம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 378

    2

    0