பக்கா பொறுக்கி..சினிமாவை விட்டு விலக முடிவு…மேடையில் மிஷ்கின் பர பர பேச்சு.!
Author: Selvan14 February 2025, 12:57 pm
சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த இயக்குனர் மிஸ்கின்
சென்னையில் நடைபெற்ற டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் மிஸ்கின் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் படம் பெப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது,இதனால் படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளது.
![Mysskin controversial speech](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/02/mysk3.jpg)
இதனையொட்டி சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பிரதீப் ரங்கன்தான்,இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து,விக்னேஷ் சிவன் உட்பட பலர் பங்குபெற்றனர்.அப்போது மேடை ஏறிய மிஸ்கின் மைக்கில் இன்னைக்கு கெட்ட வார்த்தை ஏதும் பேச மாட்டேன் என ஆரம்பித்தார்.
அதன் பிறகு படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய பாணியில் பேச ஆரம்பித்தார்,அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த RJ விஜய் ஒரு வீடியோ வரும் அதில் வரக்கூடிய நபர்களை பற்றி நீங்கள் உங்களுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்று கூறினார்,முதலில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் போட்டோவை பார்த்து பொறுக்கி என்று சொன்னார்,அதன் பிறகு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து போட்டோவை பார்த்து பெரும் பொறுக்கி,இனிய பெரும் பொறுக்கி என கூறினார்,தெடர்ந்து படத்தின் ஹீரோயின் போட்டோவை பார்த்து ஒருமையில் பேசினார்.
அதன் பிறகு அவருடைய புகைப்படத்தை பார்த்து ரொம்ப கம்மியா நல்லவங்க இருக்கிற இடத்தில,கஷ்டப்பட்டு இருக்கும் இந்த நபர் சீக்கிரம் சினிமாவை விட்டு வெளியே போக போற ஒரு இயக்குனர் என தன்னை தானே கூறி,மேடையை விட்டு கீழே இறங்கினார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.