ரஜினி காலில் விழுந்த இளம் ஹீரோ; மரியாதை தெரிஞ்ச புள்ளப்பா; நெட்டிசன்கள் கமெண்ட்

Author: Sudha
15 July 2024, 2:46 pm

சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி இல்ல திருமண விழாவில் ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ரஜினி தொடங்கி ராம் சரண், சூர்யா, அட்லி,நயன்தாரா, பிரித்விராஜ் வரை தென்னிந்திய பிரபலங்களும் கூட இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடிகர் அகில் ரஜினி காந்த் காலில் விழுந்து ஆசி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அகில் தெலுங்கின் முன்னணி நடிகர் நாகார்ஜுன் அமலா தம்பதியினரின் மகன்.சுட்டிக்குழந்தை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹலோ திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக அறியப்பட்டார். பல ஹிட் படங்களை கொடுத்து இன்று தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் ஆசி பெறும் வீடியோவை பலரும் மரியாதை தெரிஞ்ச புள்ளப்பா என்று கூறி ஷேர் செய்து வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 146

    0

    0