ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க.. அமெரிக்காவில் ஒலித்த விஜய் ஆண்டனி பாடல்..! (வீடியோ)
Author: Vignesh6 January 2024, 3:38 pm
90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது. நாகர்கோவிலை சேர்ந்த இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.
இப்படியான நேரத்தில் தான், கடந்த 19ம் தேதி மூத்த மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிகுந்த வேதனைக்குள்ளாகியது.

இந்நிலையில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்கு பல தடைகளை தாண்டி விஜய் ஆண்டனி கலந்து கொண்டது மக்களால் வரவேற்கப்பட்டது. மேலும், படங்களை தாண்டி விஜய் ஆண்டனி இசை கச்சேரி நடத்துவதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் நடத்தப்படும் பிரபல ரியாலிட்டி ஷோவான America’s got talent நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் V Unbeatable என்ற நடனக்குழு பங்கேற்றனர். அந்தரத்தில் பறந்து சாகசம் செய்த அவர்கள் ஆடிய நடனத்தை பார்த்த நடுவர்கள் வியந்து போகிவிட்டனர். குறிப்பாக நடனத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் விஜய் ஆண்டனியின் நாக்கு முக்க பாடல் அமைந்து இருந்தது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
.@v_unbeatable's performance is so flippin' GOOD! pic.twitter.com/nsqNk2dBJz
— America’s Got Talent (@AGT) January 2, 2024