விஜய்யை தேவையில்லாமல் சொறிஞ்சு விடுறீங்க.. இதெல்லாம் அதிகார திமிரில் செய்யுற சேட்டை.. லியோவுக்கு சீமான் ஆதரவு..!

Author: Vignesh
17 October 2023, 5:02 pm

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படம் வெளியாக வெகு சில நாட்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இப்படி சர்ச்சையில் சிக்கி வருவதால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

இதனிடையே, பேட்டி ஒன்றில் பேசிய சீமான், இதுவரை இல்லாத அளவிற்கு, நெருக்கடியை லியோ படத்திற்கு தமிழக அரசு ஏன் தருகிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று தெரியுது. அரசியலுக்கு வரப்போறாருன்னு தெரியுது. இதனால நீங்க அவருக்கு நெருக்கடி கொடுக்கறீங்க. விஜய் ஒரு முடிவு எடுத்துட்டார் நடிப்பதை நிப்பாட்டிட்டு அரசியலுக்கு வர போறேன்னு முடிவெடுத்துட்டார்.

leo

தேவையில்லாம நீங்க அவர சொறிஞ்சு விடுறீங்க. அதிகார திமிரில் செய்கிற சேட்டை தான் இது. தண்ணில போடுற பந்தை அமுக்கி அமுக்கி விட்டா எகிறத்தானே செய்யும். தூரத்தில் இருந்து பார்க்கிற நமக்கே வெறி ஏறுது. அப்போ விஜய்க்கு எப்படி இருக்கும் என்று சீமான் பேசியிருக்கிறார்.

Seeman - Updatenews360

மேலும், ரெட் ஜெயண்ட் ஒரு படம் தயாரித்தால் பிச்சுகிட்டு ஓடிடுமா? இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிடவில்லை. இப்ப இருந்து விஜய்க்கு நெருக்கடி தரிங்க பாடல் வெளியீட்டு விழாவில் இருந்து விஜயை டார்ச்சர் செய்றீங்க. நியாயத்தை பேசுவோம் என்று சீமான் விஜய் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?