லாஜிக்கும் இல்லை மேஜிக்கும் இல்லை.. ‘குப்பைப்படம்’ இதுவே சகிக்கல.. இதில் இரண்டாவது பாகம் வேறயா? கழுவி ஊற்றிய பயில்வான் ரங்கநாதன்..!

Author: Vignesh
3 அக்டோபர் 2022, 3:30 மணி
bayilvan ranganathan -updatenews360-1
Quick Share

நானே வருவேன்

தனுஷின் நானே வருவேன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியான நிலையில் முதல் பாகம் மட்டுமே விறுவிறுப்பாக இருப்பதாகவும் இரண்டாம் பாகம் மொக்கை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆன பிறகு நானே வருவேன் திரையிடப்பட்ட ஸ்க்ரீன்களும் குறைக்கப்பட்டன.

பயில்வான் ரங்கநாதன்

திரையிட ஸ்க்ரீன் கூட கிடைக்காமல் திணறி வருகிறது நானே வருவேன். இந்நிலையில் தனுஷின் நானே வருவேன் படம் குறித்த தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதில் அவர் கூறியிருப்பதாவது, தனுஷின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் செல்வராகவன்.

மிருக வெறி

இந்தப்படத்தில் தனுஷ், சரவண சுப்பையா, இந்துஜா ரவிச்சந்திரன் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சரவண சுப்பையாவுக்கு இரட்டை பிள்ளைகள். இரண்டு தனுஷ். ஒரு தனுஷ் நார்மலாக இருக்கிறார். மற்றொரு தனுஷ் மிருக வெறி பிடித்தவராக உள்ளார். சிறுவயதிலேயே காட்டிற்கு ஓடி விடுகிறார். காட்டில் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு 2 மகன்கள்.

அற்புதமான நடிப்பு

அப்பாவிடம் வளரும் தனுஷ் ஐடி துறையில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி இந்துஜா ரவிச்சந்திரன். மகள் மனைவி என வாழ்ந்து வருகிறார். அவருடையமகளுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. பேய் பிடித்தது போல் பேசுகிறார். கதிர் என்பவனை கொன்றால் உடலை விட்டு செல்வேன் என்று அந்த ஆவி சொல்கிறது. மிருக வெறி பிடித்த தனுஷ்தான் கதிர். தனுஷ் இரட்டை வேடத்தில் அற்புதமாக நடித்துள்ளார். மகளுக்காக உயிரை கொடுக்கும் அப்பாவாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பாவின் வேட்டை

மற்றொரு தனுஷ், மிருகத்தை விட கேவலமாக இருப்பது போல் நடித்துள்ளார். ஆறு அறிவு படைத்தவன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக உள்ளார். இரவில் வேட்டைக்கு செல்லும் போது அவருடைய காரில் மறைந்து செல்லும் அவரது மகன், தனது அப்பா 3 பேரை கொலை செய்வதை பார்க்கிறான். அதன்பிறகு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இதுவே சகிக்கல

செல்வராகவனும் மிருக வெறி பிடித்தவராக காட்டு வாசிப்போல் ஒரு காட்சியில் நடித்துள்ளார். சரவண சுப்பையாவும் ஒரு காட்சியில்தான் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு சமமாக நடித்திருப்பவர், அவருக்கு மகள் கேரக்டரில் நடித்துள்ள பெண்தான். பின்னாளில் ஹீரோயினாக வருவார். ஷார்ட்டுகள் அருமை. படத்தில் பல திடீர் திடீர் திருப்பங்கள் உள்ளன. இரண்டாவது பாகம் உள்ளது போல் முடித்துள்ளார். இதுவே சகிக்கல…இதில் இரண்டாவது பாகம் வேறயா?

ஹாலிவுட் படங்களின் காப்பி

ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுத்துள்ளார். காஞ்சுரிங், எக்ஸாரிஜிஸ்ட் படங்களின் காப்பியாக நானே வருவேன் திரைப்படம் உள்ளது. செல்வராகவனுக்கு ஒரு கேள்வி, ஆவி வந்து தன் அப்பாவை கொலை செய் என்று சொல்வதற்கு பதில் அந்த ஆவியே கொலை செய்திருக்கலாமே? வனப்பகுதியில் காவலர்கள் இல்லை என்பதை போல் காட்டியிருக்கிறார்.

குப்பை படம்

லாஜிக்கும் இல்லை மேஜிக்கும் இல்லை. படம் பொறுமையை சோதிக்கிறது. நம்பகத்தன்மையே இல்லை. செல்வராகவன் பைத்தியக்காரத்தனமான படத்தை எடுத்துள்ளார். படம் பார்ப்பவர்களை பைத்தியம் என நினைத்துவிட்டாரா? ஒரு பண்பட்ட இயக்குநர் இப்படி ஒரு குப்பை படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தானுவை வஞ்சம் தீர்த்துள்ளார் செல்வராகவன்.

பாவமெல்லாம் சும்மா விடுமா?

ஆளவந்தானுக்கு பிறகு கலைப்புலி தானு தயாரித்துள்ள படங்களில் இதுதான் மொக்கை படம். இந்தப் படம் வெற்றி பெறாமல் போனதற்கு காரணம் செல்வராகவன் மட்டும்தான். பல கோடி செலவு செய்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நஷ்டமடைய செய்த பாவமெல்லாம் செல்வராகவனை சும்மா விடுமா? இவ்வளவு வன்மத்தை எப்படி எழுத முடிகிறது செல்வராகவனால், நானே வருவேன் திரைப்படத்திற்கு நான் கொடுக்கும் மதிப்பெண் 100க்கு 27. இவ்வாறு நானே வருவேன் திரைப்படத்தை கழுவி ஊற்றியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 473

    0

    0