உண்மையில் ‘நானே வருவேன்’ லாபமா?.. நஷ்டமா?.. பிரபல விநியோகஸ்தர் வெளியிட்ட உண்மை இதுதான்..!

Author: Vignesh
7 October 2022, 2:00 pm

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த படம் வெளிவந்தது.

பொன்னியின் செல்வன் படத்துடன் ஒப்பிட்டு பார்கையில், நானே வருவேன் திரைப்படம் வசூலில் அடிவாங்கும் என்றும், படம் நஷ்டமடையும் என பெரிதும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படம் Table Profit என படக்குழு தெரிவித்துள்ளது. நானே வருவேன் திரைப்படம் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங் உரிமை என முழு படத்தின் பட்ஜெட்டையும் ரிலீசுக்கு முன்பே வசூல் செய்து விட்டதாக பேசப்பட்டு வருகிறது.

அதன்பின் திரையரங்கில் வெளியான நானே வருவேன் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே கொடுத்துள்ளதாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

நானே வருவேன் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.35 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வசூலின் ஷேர் போக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிற்கு ரூ.15 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 610

    0

    0