நாட்டாமை படத்தை மிஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார்; வாய்ப்பை தட்டிப் பறித்த சரத்குமார்
Author: Sudha19 July 2024, 12:50 pm
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு 1994 இல் வெளிவந்த திரைப்படம் நாட்டாமை.நாட்டாமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர்.
கே எஸ் ரவிக்குமார் முதலில் விஜயகுமார் கேரக்டரில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியிடம் கேட்டிருந்தார். அவர் விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.நாட்டாமை திரைப்படம் சரத்குமாருடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்த நான்காவது திரைப்படமாக அமைந்தது. நாட்டாமையின் மனைவியாக நடிக்க முதலில் குஷ்பு மறுத்துவிட்டார். பெரும்பான்மையான நேரங்களில் வயதான தோற்றத்துடன் நடிக்க வேண்டி இருக்கும் என்பதால் மறுத்தார். பிறகு கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி அவர் அந்த திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்.முதலில் விஜயகுமார் நாட்டாமையின் அண்ணனாக நடிக்க பேசப்பட்டது, பிறகு விஜயகுமார் அவர்களை நாட்டாமையின் அப்பா கேரக்டராக மாற்றி நாட்டாமையாக சரத்குமாரே நடித்தார். வயதான அப்பா விஜயகுமார் கேரக்டரில் நடிக்க முதலில் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் தேர்வு செய்தது இயக்குனர் பாரதிராஜா அவர்களைத் தானாம்.