சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகர் சோபிதா துலிபாலாவை ரகசியமாக டேட்டிங் செய்து காதலித்து வந்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி தன்னுடைய வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
இந்த நிலையில் இவர்கள் நிச்சயதார்த்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு இந்த நிலையில் பிரபல ஜோசியர் வேணு சுவாமி என்பவர் நாக சைதன்யா – சோபிதாவின் திருமணமும் விவாகரத்தில் முடிந்துவிடும் 2027 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்த பிரிந்து விடுவார்கள். அந்த விவாகரத்தும் நாக சைதன்யாவுக்கு வேறு ஒரு பெண் மீது ஏற்படும் காதலால் தான் என கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த விஷயம் குறித்து சினிமா பத்திரிகையாளரான சுபைர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளர்சித்துள்ளார். ஜோதிடர் சொல்வது எல்லாமே நடந்திருக்கிறதா? முன்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆவார் என்று சொன்னார்கள். இதுவரை அது நடக்கவில்லை. சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்த போது இந்த வருஷம் நல்லா இருக்கும் என்று சொன்னவர் வாயாலே சென்னை விரைவில் அழிந்து விடும் போல என கூறினார்கள்.
எனவே ஜோதிடர் சொல்வதில் எல்லாம் நம்பிக்கையும் இல்ல அது உண்மையும் இல்லை. பிரபலத்தின் வீட்டு விஷயங்களை எடுத்துக்கொண்டு ஜோதிடம் பார்க்கிறேன் எனக் கூறி இறங்கினால் அவர்களுக்கும் பிரபலம் கிடைக்கும். அதனால் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் தான் அவர்களை இப்படி பேசுகிறார்கள் என சூப்பர். தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தார். இதனால் இந்த திருமணம் நிறுத்தப்பட போவதும் இல்லை விவாகரத்து ஆகப்போவதும் இல்லை விளக்கத்தை கொடுத்தார்.