ஆபாச நடிகர் ஆகும் சமந்தாவின் முன்னாள் கணவர்? அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்!
Author: Shree12 May 2023, 9:29 am
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நாகசைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் ப்ரோமோஷனுக்காக தமிழ் யூடியூபர் இர்பானின் நேர்காணலில் பல விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த நாக சைதன்யா, இந்த கேள்வி கேட்டதும் முதலில் ஷாக் ஆன அவர் பின்னர் நடிக்க மாட்டேன் ப்ரோ… நான் அதை என் வாழ்க்கையில் உண்மையிலே அனுபவித்திருக்கிறேன். அப்பறோம் ஏன் அப்படி நடிக்கணும்? என முகம் சுளிக்காமல் செம கூலாக பதிலளித்தார். ஒரு வேலை ஆபாச நடிகரின் டாக்குமென்டரி பார்த்து நான் இன்ஸ்பையர் ஆகியிருந்தால் நடிப்பேன். கதை ரெடியா வச்சிருக்கீங்களா? என ஆங்கரிடம் கேட்டு கிண்டலடித்தார்.