மீண்டும் நடிகர் நாக சைதன்யாவின் குடும்பத்தில் இணைந்த சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Vignesh
8 August 2024, 6:07 pm

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் தான். ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக டோலிவுட்டிலும், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் அவுட்டிங் சென்று வந்தார் என ஏகப்பட்ட போட்டோ ஆதாரங்களும் சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் ஆக பூகம்பங்களாகவும் கிளம்பியது.

சுற்றுலா சென்று தனித்தனியாக எடுத்த போட்டோக்களும் வெளியாகி மேலும், வெளிநாட்டில் ஒரு மியூசியத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவை உருகி உருகி காதலித்து வந்த நிலையில், இருவரும் 2017 ஆம் ஆண்டு சமந்தா நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது சமந்தாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்பதுதான். அதுவும், ஒரு காரணமாக இருந்த நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில், திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தாவாம். இதனை வைத்து நாகர்ஜுனா குடும்பத்தில் சமந்தா என்ற பெயர் எப்பவும் இருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 266

    0

    0