கொடுமை படுத்திய சமந்தா – புது வீடு வாங்கி குடியேறிய நாக சைதன்யா!
Author: Shree27 March 2023, 10:10 pm
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நாக சைதன்யாவுடன் வாழ்ந்த போது சமந்தா தான் ஹத்ராபாத்தில் புது வீடு வாங்கி அதில் இருவரும் வாழ்ந்து வந்தார்களாம். ஆனால் விவகாரத்து பின்னர் நாக சைத்தன்யா அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது சொந்தமாக தான் சம்பாதித்த பணத்தில் ரூ. 15 கோடிக்கு ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்