பிரபல நடிகைக்கு பிரபோஸ் செய்த சமந்தாவின் மாஜி கணவர்.. லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் வீடியோ..!
Author: Vignesh14 February 2024, 3:28 pm
மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு, பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். முன்னதாக, சமந்தா அவரது இன்ஸ்டா கணக்கில் நாகசைதன்யா குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருந்தார்.
இதனிடையே, நடிகை நாக சைதன்யா காதலர் தினத்தன்று சாய் பல்லவியிடம் பிரபோஸ் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்தினை நாக சைதன்யா பகிர்ந்து இருக்கிறார். கொஞ்சம் சிரித்தால் தான் என்ன? என்று நாக சைதன்யா சொல்லும் போது சாய் பல்லவி சிரித்தவாறு வெட்கப்பட்டுள்ள இந்த வீடியோவை சாய் பல்லவி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Happy Valentine’s ☺️❤️ pic.twitter.com/3yoJm3uU56
— Sai Pallavi (@Sai_Pallavi92) February 14, 2024