தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகராக இருந்து வருபவர்தான் நாக சைதன்யா இவர் நடிகை சமந்தாவுடன் சில திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக் படமான “ஹே மாயா சேஷாவே” திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்த பின் 2017 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி வெறும் நான்கு வருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களால் மிகச்சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நாக சமந்தா ஜோடி விவாகரத்து செய்ததால் ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர் .
அதுமட்டுமில்லாமல் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த சில மாதத்திலேயே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகை சோபித்த துலிபாலாவுடன் எடுத்துக்கொண்ட ரகசிய போட்டோக்கள் டேட்டிங் புகைப்படங்கள் உள்ளிட்டவை இணையத்தில் லீக் ஆகி அவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே அதை மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இன்று நடிகர் நாக சைதன்யா – சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இப்போதுதான் ஒரு ரகசியம் வெளியாகியுள்ளது.
அதாவது நாக தன்யா சோபிதா தூலிபாலா இருவரும் தனித்தனியே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை எடுத்து ஒன்று சேர்த்து பார்த்தால் அவர்கள் இருவரும் ஒரே இடத்திற்கு தான் சென்று லூட்டி அடித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் நடிகர் நாக சைதன்யா சமந்தா கூட இருக்கும்போதே சோபிதாவுடன் தொடர்பில் இருந்தாரா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.