மீண்டும் மீண்டுமா..பிரபல காதல் ஜோடி திருமணப்பட உரிமையை வாங்கிய நிறுவனம்..கோடிகளை அள்ளும் ஜோடிகள்..!

Author: Selvan
26 November 2024, 4:43 pm

கோடிகளை அள்ள போகும் திருமண ஜோடி

நடிகர் நாக சைதன்யா-நடிகை சோபிதா துலிபாலா விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.இவர்களின் திருமண ஆவணப்படத்தின் உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Naga Chaitanya and Sobhita wedding updates


ஏற்கனவே நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து,கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து,பின்பு கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.


அதன்பின்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இதையும் படியுங்க: தீவிர ரசிகைக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ்…என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆவீங்க ..!


இருவரும் தங்களுடைய காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட 8 ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

Netflix wedding documentary deals


ஆவணப்படத்தை வாங்கிய நிறுவனம்

இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்,இந்தத் திருமண நிகழ்வின் ஆவணப்பட உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 50 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப்படத்தின் ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு ராசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 131

    0

    0