விவாகரத்துக்கு பின் பிரபல நடிகையுடன் டேட்டிங்… ஓட்டலில் சிக்கிய நாக சைதன்யாவின் புகைப்படம் லீக் ..!
Author: Vignesh28 March 2023, 6:00 pm
சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவகாரத்தை அறிவித்தனர்.

விவகாரத்தபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று டேட் செய்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், லண்டனில் இருக்கும் ஒரு பாரில் சோபிதாவுடன் நாக சைதன்யா டின்னர் சாப்பிட்டு ஓட்டல் செஃப் உடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
இது படத்திற்காக லண்டன் ஷூட்டிங்கின் போது இருவரும் எடுத்த பழைய புகைப்படம் தான் அது என்று நாக சைதன்யா ரசிகர்கள் தற்போது தெரிவித்து வருகிறார்கள்.