விசில்,மேளதாளத்துடன் ஜாம் ஜாம்-னு முடிந்த நாக சைதன்யா-சோபிதா திருமணம்..வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
5 December 2024, 5:32 pm

பிரபலமான தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகனான நாக சைதன்யா திருமணம் நேற்று இரவு,அவர்களுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

Viral wedding video

நாக சைதன்யா இரண்டாவதாக சோபிதாவை காதலித்து கரம் பிடித்துள்ளார்.தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்க: சண்டை போட ரெடி..சமந்தா போட்ட இன்ஸ்டா பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த நிலையில் நாக சைதன்யா சோபிதா திருமண வீடியோ வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் ஒரு புறம் மேளதாளங்கள் முழங்க இன்னொரு புறம் அய்யர் மணமக்களை வாழ்த்தி மந்திரம் சொல்லிட்டு இருக்கும் போது ,நாக சைதன்யா தம்பி அகில் சந்தோசத்தின் உச்சத்திற்கு சென்று விசில் அடிக்குற சத்தம் அங்க இருக்கின்ற அனைவரையும் பூரிப்படைய செய்தது.

அந்த வீடியோவில் மணமக்களை நாகார்ஜூனா வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளார்.அதில் “சோபிதா மற்றும் சாய் ஆகிய இருவரும் அவர்களின் அழகான பயணத்தை தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் என் அன்பு சாய் ,எங்கள் குடும்பத்திற்கு சோபிதாவை மனமார வரவேற்கிறோம். நீங்கள் இருவரும் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்த விடீயோவை பார்த்த ரசிகர்களும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணன் அண்ணி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!