ஜோராக நடந்த நிச்சயதார்த்தம்.. வெளியான நாக சைதன்யா – சோபிதா துலிபாலா புகைப்படம்..!

Author: Vignesh
8 August 2024, 2:15 pm

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் தான். ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக டோலிவுட்டிலும், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் அவுட்டிங் சென்று வந்தார் என ஏகப்பட்ட போட்டோ ஆதாரங்களும் சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் ஆக பூகம்பங்களாகவும் கிளம்பியது.

சுற்றுலா சென்று தனித்தனியாக எடுத்த போட்டோக்களும் வெளியாகி மேலும், வெளிநாட்டில் ஒரு மியூசியத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவை உருகி உருகி காதலித்து வந்த நிலையில், இருவரும் 2017 ஆம் ஆண்டு சமந்தா நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது சமந்தாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்பதுதான். அதுவும், ஒரு காரணமாக இருந்த நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதியில், திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 184

    0

    0