அந்த இடம் அவளுக்காக.. சமந்தாவை கேவலப்படுத்திய நாக சைதன்யா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 10:31 am

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ஒருவருக்கொருவர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து பின்னர் 3 வருடத்தில் பிரிந்தனர். சமந்தா தனது கேரியரில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட பின்னர் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர்.

Naga Chaitanya talked about Sobhita

நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை இந்த முறை நல்லபடி அமைவதற்காக அவரது தந்தை நாகார்ஜுனா முன்னிலை வகித்து, சோபிதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் அனைத்து விவரங்களையும் விவரித்து ஒப்புதல் அளித்துள்ளார்.

இருவரின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி ஹைதராபாத் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வுக்காக அமிதாப் பச்சன், அமீர் கான், எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு குடும்பத்தினர், ராணா டகுபதி குடும்பத்தினர் போன்ற பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Nagarjuna Akkineni Family Celebrate Chaitanya Sobhita Marriage

தனது திருமணம் குறித்து பேசிய நாக சைதன்யா, சோபிதா என்னை நன்றாக புரிந்துகொள்கிறார். எனக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புகிறார். அவருடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரஹ்மான் யார் தெரியுமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே

ஹைதராபாத் அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் உள்ள தாத்தாவின் சிலைக்கு முன் திருமணம் நடத்துவதில் என் குடும்பத்தினர் உறுதியாக இருக்கின்றனர். அந்த இடத்துக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட தொடர்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Sam Fans Anger on Naga Chaitanya

இந்நிலையில், சமூக ஊடகங்களில் சிலர் “சமந்தா விட்டு சென்ற வெற்றிடத்தை சோபிதா நிரப்புகிறாரா? இந்த திருமண வாழ்க்கையை காப்பாத்திக்கோங்க என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 206

    0

    0