நாகா சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம்… யாரு அந்த பொண்ணுனு தெரியுமா

Author: Vignesh
15 September 2023, 10:00 am

நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் பிரிகிறோம் என தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

2021 சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் நாகசைதன்யா நடிகை சோபிதா என்பவரை காதலிப்பதாக செய்திகள் பரவியது. ஆனால், அதை அவர்கள் இருவரும் மறுத்தனர். இதனிடையே, நாகசைதன்யா விரைவில் இரண்டாம் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. அவரது அப்பா நடிகர் நாகார்ஜுனா தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். பெண்ணின் குடும்பம் முழுக்க முழுக்க பிசினஸ் பின்னணி கொண்டது என்றும், சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 657

    5

    2