சமந்தாவுக்கு ஆப்பு வைத்த மாஜி கணவர்.. வாய்க்கொடுத்து மாட்டி கொண்ட நாக சைதன்யா..!
Author: Vignesh1 May 2023, 10:30 am
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.

இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபால உடன் காதல் கிசுகிசுகிக்கப்பட்டு வருகிறார்.

தற்போது நாக சைதன்யா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஷ்டடி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக பிரபல யூடியூபர் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் உங்களின் ரகசிய கிரஷ் யார் என்று கூறுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு நாக சைதன்யா, ரகசிய கிரஷ்ல்லாம் இல்லை என்றும், கிரஷ்-ன்னா ஓப்பனா சொல்லிடுவோம் எனவும், கடைசியாக ஒரு ஆங்கில படமான Babylon பார்த்ததாகவும், அந்த படத்தில் நடித்த நடிகை மார்கோ ராப்பி தான் தன்னுடைய கிரஷ் என்று கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் சிலர் இவர் தொடர்ச்சியாக சமந்தாவை வெறுப்பேத்தவே இவ்வாறாக கூறியுள்ளார் என தெரிவித்தும் வருகின்றனர்.